நடிகர் விஜய், மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி.ஃபிரெண்ட்ஸ் படத்தில் உள்ள மஞ்சள் பூசும் என்ற பாடல் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி சிறிது காலமாக உடல்நல குறைவாக இருந்தார்.தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது தனக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் பணம் கொடுத்து உதவிய , கன்னட நடிகர்கள், போலீசார் தம்மைதமிழ்பெண் என்ற காரணத்தினால் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். தம்மை காப்பாற்றுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More