கிராமங்களில் தங்கும் திட்டத்துக்காக கரேகுட்டா என்ற கிராமத்துக்கு செல்ல கர்நாடக முதல்வர் குமாரசாமி ராய்ச்சூரில் பேருந்தில் பயணித்தார். அப்போது திடீர்ரென்று யெர்மாருஸ் அனல் மின் நிலையப் பணியாளர்கள், சம்பளப் பிரச்சனை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அந்த சமயத்தில் அவ்வழியே முதலமைச்சர் வந்த பேருந்தையும் அனல் மின் நிலையப் பணியாளர்கள் மறித்தனர். பேருந்தை மறித்த அவர்கள் வெட்கக் கேடு, வெட்கக் கேடு என முழக்கமிட்டதால் முதலமைச்சர் குமாரசாமி கோபமடைந்து போராட்டக்காரர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார்.