Mnadu News

சொந்த செலவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் கர்நாடக முதல்வர்

மக்களின் வரிப்பணத்தை தனது சொந்த செலவிற்காக பயன்படுதியாக எழுந்த விமர்சனங்களை அடுத்து, தனது அமெரிக்க பயணம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார். கிராமங்களில் தங்குதல் திட்டத்தின் கீழ் பிடார் மாவட்டத்தின் உஜலமாபா கிராமத்தில் தங்கிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நியூஜெர்சியில் அமைக்கப்படவுள்ள அடிச்சுன்சனாகிரி மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, தான் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறினார். மேலும் இது அரசுமுறைப் பயணம் அல்ல எனவும், தனது சொந்த செலவில் அமெரிக்க பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More