நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அழுது கொண்டே மக்கள் சேவை செய்யக்கூடாது, எப்போதும் மகிழ்ச்சியுடனேயே ஆட்சியை நடத்த வேண்டும் என்றார். மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதில் தமக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை என்ற அவர் கூறினார். நன்றாக யோசித்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், ராமலிங்கரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறிய அவர், மேலும் அவர் கூறுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.