நடிகை ஜோதிகாவும், நடிகர் கார்த்தியும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் ஜீத்துஜோசப் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. , இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகா இருவருக்கும் அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்திக்கு அப்பாவாக சத்யராஜ் ஏற்கனவே நடித்திருந்தாலும், ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.