மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெருகிறது. வேட்புமனுவைத் தாக்கல் செய்யாதவர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை தொகுதி வேட்பாளர் என்.ஆர். நடராஜன் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.வேட்புமனுத்தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த என்,ஆர் நடராஜன் தஞ்சையில் எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசை நிர்பந்திப்பதே தனது முதல் கோரிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் காவேரி பாதுகாப்பு மண்டலமாக தஞ்சையை அறிவிக்கவும் பாடுபடுவேன். இவ்வாறு இவர் பேசினார்.