Mnadu News

KH 233 இசையமைப்பாளர் யார் தெரியுமா? 

“விக்ரம்” படத்தின் அதிரி புதிரி வெற்றி உலக நாயகனுக்கு இன்னும் கூடுதல் உத்வேகத்தை அளித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், விக்ரம் வெற்றிக்கு பிறகு அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

வெறும் ஹீரோ மட்டுமல்லாது வில்லனாகவும் நடிக்க களம் இறங்கி உள்ளார் உலக நாயகன் கமல். ஆம், புராஜக்ட் கே படத்தில் 20 நாட்கள் அவரின் கால்ஷீட் லாக் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அடுத்த வருடம் உலக நாயகன் கமலின் வருடம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், இந்தியன் 2, புராஜக்ட் கே, கமல் 233, கமல் 234 என அடுத்தடுத்த லைன் அப்பில் உள்ளன. 

இதில் கமல் 233 படத்தின் இயக்குனர் வினோத் என்பதை கமல் சமீபத்தில் ஒரு முன்னோட்ட வீடியோ வெளியிட்டு அறிவித்தார். ஆம், Rise to Rule என்ற வாசகத்தை சுமந்து வெளியான முன்னோட்டம் பார்த்த ரசிகர்கள் செம சம்பவம் இருக்கு என இப்போதே ஆவலோடு உள்ளனர். 

குறிப்பாக கமல் 233 எதை பேச போகிறது என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அது நெல் ஜெயராமன் வாழ்வை மையப்படுத்தி எடுக்க போவதாக தகவல் கசிந்த நிலையில், தற்போது சர்வதேச ஊடக அரசியலை பொருளாதாரத்தை குறித்து படத்தின் கதைக்கரு இருக்க போவது தெரிய வந்துள்ளது. 

ஆனால், முன்னோட்ட வீடியோ வில் யார் அந்த இசையமைப்பாளர் என்பதை கமல் கூறாத நிலையில், ஒரு பிரத்யேக தகவல் கிடைத்து உள்ளது. அது என்னவென்றால் விக்ரம், இந்தியன் 2 படங்களின் மூலம் உலக நாயகன் கவனத்தை சுண்டி இழுத்த ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

ஆனாலும், விஸ்வரூபம், உத்தம வில்லன் என சவால் மிக்க கமலின் படங்களில் பணியாற்றிய ஜிப்ரான் அவர்களுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கமல் 233 வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது நடிகர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this post with your friends