கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், குமாரசாமி முதலமைச்சராக இருப்பதை பிடிக்காத சித்தராமையா ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்தார் என்று சமீபத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள சித்தராமையா, ஆட்சி செய்ய தெரியாதவர் குமாரசாமி என்று தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, குமாரசாமி தன்னை நண்பனாக பார்க்கவில்லை எனவும், எப்பொழுதும் எதிரியாகவே பாவித்து வந்தார் என்றும் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More