Mnadu News

புயல் காரணமாக ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டதால் தீவிர முன் ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கன்னியாகுமரியில் ஏற்கனவே கடல் சீற்றதோடு காணப்பட்டு ,மேலும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வரும் 28ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை புயலாக வலுப்பெரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

Share this post with your friends