நம்முடைய முன்னோர்கள் பசிக்கும்போது உண்ணும் உணவுக்கும், நோயின் போது எடுத்துக்கொள்ளும் மருந்துக்கும் நிறைய முக்கியத்துவம்தந்து தங்களுடைய வாழ்வியல் அனுபவத்திலிருந்து நிறைய வரையறைகளைவகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வந்ததது தான் யோகாசனம். இந்தயோகாசனத்தை முறையாகா யோகாசனம் பயின்றவர்களிடம் பயில்வதுமுக்கியம் என இயற்றை மற்றும் யோகமருத்துவர் கீதாஞ்சலி.
யோகத்தின்பலன்கள்
உடல் உறுப்புகளை நன்றாக இயங்கவைக்க யோகாசனம் பயன்படுகிறது.சுரப்பிகளின் இயக்கத்தை சீரமைத்து இதயத்தையும், இரத்த ஊட்டநாளங்களையும் தூண்டுகிறது. இதன்மூலம் உடலுக்கு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் தளர்ச்சியை குறைத்து புத்துணர்ச்சி தருகிறது. உடல்வளையும் தன்மை அதிரிக்கிறது. இது உடலுக்கு உறுதி அளிக்கிறது.
குழந்தைகளின்ஞாபகசக்தியைஅதிகரிக்கும்.
கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
உடல் எடையை பராமரிப்பது. உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது.
- இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பது.
- உடலில் தேவையற்ற கொழுப்பு சேரவிடாமல் தடுத்து இதய நோய்கள் வராமல் காப்பது.
- ஆஸ்துமா, சளி, சைனஸ்போன்றநோய்களைநிவர்த்திசெய்கிறது.
- நோய்எதிர்ப்புசக்தியைஉருவாக்குகிறது.
- உடல்சோர்விலிருந்துவிடுபட்டுசுறுசுறுப்புடன்இயங்கசெய்கிறது.
யோகத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் பற்றி முந்தய தொகுப்பில் பார்த்தோம்.
யோகாசனத்தைபற்றிய தவறான கருத்துகளுக்கு வதந்திகள், யோகத்தைப் பற்றி அரைகுறையான அறிவு உள்ளிட்டவை காரணங்களாகும். வித்தியாசமான கொள்கைகளும, வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன தேர்ச்சியடையாத பயிற்ச்சியாளர்களின் வழிகாட்டல்கள், மோசமானவிளைவுகளை உண்டாக்குகிறது.
யோகாசனம் எப்படி செய்ய வேண்டும்.
யோகாசனம் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். காலையில் உடல் பிடிப்பாக இருக்கும். ஆனால் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மாலை உடல்தளர்வாவும் மனம் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கும். எனவே யோகத்தினை தினமும் காலையிலும், மாலையிலும் செய்வது சிறந்தது. இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கிறது.
சூரிய ஒளியின் கடும் வெப்பத்தில் கண்டிப்பாக செய்யக்கூடாது .சுத்தமான, காற்றோட்டமுள்ள, சப்தமில்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிற்சிக்கு முன் மலஜலங்களை வெளியேற்றிவிட வேண்டும், மலச்சிக்கல் இருக்கும்போது கடினமானஆசனங்கள்செய்யக்கூடாது.
அவசியப்பட்டால் நீர் அருந்தலாம். உணவு நேரம் முதல் பயிற்சி நேரம் வரை ஜீரணத்திற்கான இடைவெளிவிடவேண்டும். சிற்றுண்டியாக இருந்தால் ஒருமணி நேரமும், பேருண்டியாக இருந்தால் 4 மணி நேரமும் இடைவெளி இருக்க வேண்டும்.
குளித்த பிறகு யோகாசன பயிற்சிசெய்யலாம். குளியல் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இல்லையென்றால் ஒருவர் யோகப் பயிற்சியை செய்து முடித்த 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.
பயிற்சி செய்பவர் உடல் சதைகளில் அசவுகரியம் (வலி) ஏற்பட்டால் உடனடியாக யோகா பயிற்சியாளரிடம் கூறவேண்டும்.
கண்களை மூடாமல் முதலில் பயிற்சி செய்து நன்கு பயிற்சி பெற்று சரியான நிலையை அடைந்தபிறகு கண்களை மூடி பயிற்சி செய்யலாம்.
பயிற்சியாளாரின் மூலம் சரியான மூச்சுப் பயிற்ச்சியின் விவரங்களை அறிந்து செய்ய வேண்டும். மூச்சை மூக்கு வழியாக மட்டும் செலுத்தி, வாய் வழியாக செலுத்தாமல் இருக்க வேண்டும். மூச்சை அடக்கி பயிற்ச்சியில் ஈடுபடக்கூடாது.
உடல்நிலையை பற்றி பயிற்சியாளரிடம் கேட்டு அதற்கேற்ப ஆசனப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்கிறார்.