கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி கொண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என, மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடியூரப்பா பங்கேற்றார்.எடியூரப்பா கூறியதாவது, தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன் மதிய உணவு உட்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பதினேழு முதல் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறினார். கர்நாடக முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More