Mnadu News

பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டி – இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன்

நடப்பு சீசனில், 10வது போட்டியாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடைபெற்ற இந்த பந்தயத்தைக் காண திரளான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.மெய்சிலிர்க்கும் வேகத்தில் முன்னணி வீரர்கள் கார்களை இயக்கியதைக் கண்டு அவர்கள் ஆரவாரம் செய்தனர். முடிவில் ஒரு மணி 21 நிமிடம் 8 வினாடிகளில் இலக்கை எட்டி, மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். போட்டஸ், லெக்லர்க் அடுத்தடுத்த இடங்களில் வந்தனர்.ஏற்கனவே ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஹாமில்டன், நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்ற 10 பந்தயங்களில் 7 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends