Mnadu News

உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு …

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான பட்டியலை இன்று வெளியிட உள்ளார்கள் .இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய அணிக்கான பட்டியலை வெளியிடும் .

அந்த வகையில் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் 23 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் .இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 15 பேர் கொண்ட வீரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், மார்ஷ், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ்,அலெக்ஸ் கெரி, கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் கார்டர் நைல், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹரண்டாஃப், சாம்பா, நாதன் லயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு ஆண்டாக பந்தை சேதப்படுத்திய குற்றத்திருக்காக விளையாடாமல் இருந்த வார்னர்,ஸ்மித் ஆகியோர் உலக கோப்பை விளையாட்டில் தேர்வாகிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends