தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. இந்நிலையில், யாருக்கு வாக்களிக்கலாம் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது “மாம்பழமோ..மாபெரும் பழமோ.. பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு, தேர்தல்=தேத்துதல்(பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,
தேர்தல்=தேத்துதல்(பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே.காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 16, 2019