Mnadu News

கடைக்கு சென்று தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய மம்தா பானர்ஜி…

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கிழக்கு மிட்னாபூர் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.இதன்பின்பு, ஒடிசா எல்லையை ஒட்டி அமைந்த தத்தபூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். முன்னதாக மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உள்ளிட்ட பலரது வாழ்வு குறித்தும் கேட்டறிந்தார். அந்த பகுதியில் இருந்த மக்களுடன் அவர் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்தார்.

இதன்பின் அவருக்கு தேநீர் அருந்த வேண்டும் என தோன்றியது. இதனால் அவர் தேநீர் கடை ஒன்றுக்கு சென்றார்.அவருடன் கட்சி தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, போக்குவரத்து மந்திரி சுபந்து அதிகாரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் சென்றனர். அங்கு கடைக்காரரிடம் அனுமதி பெற்று கொண்டு அவரே தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அதனை அங்கிருந்த மக்களுக்கு அவரே தன் கைப்பட வழங்கினார்.

தேர்தல் திட்ட நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுரையின்படியே, தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது, மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பது, அவர்களின் குறைகளை கேட்பது, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் வீடுகளுக்கு செல்வது ஆகியவற்றை மம்தா மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது

Share this post with your friends