Mnadu News

சூர்யாவிற்கு மாஸ் கதை தயார்

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும், இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இயக்குனர் பாண்டிராஜிடம் ரசிகர் ஒருவர் “சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதலளிக்கும் வகையில் இயக்குநர் பாண்டிராஜ் “பக்கா, மாஸ், கிராமப்புற, ஆக்சன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் தயாராகி வருகிறது” என்று பதிலளித்துள்ளார்.

Share this post with your friends