Mnadu News

காப்பான் படத்தின் மாஸ் அப்டேட்

தமிழ்த்திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.இவரது படங்கள் மற்றும் இவர் செய்யும் நல்ல விஷயங்களால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகிகொன்டே இருக்கிறார்கள் .என் ஜி கே படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் காப்பான் இந்த படத்தின் டீசெர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .

Share this post with your friends