Mnadu News

உலகக்கோப்பை தொடரில் விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால்…

உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

தினேஷ் கார்த்திக்கிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், விஜய் சங்கர் சில போட்டிகளில் விளையாண்டார்.3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கர், 58 ரன்களை எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எதிர்பாராதவிதமாக வலைப்பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தால் அவர் கடந்த போட்டியில் விளையாடவில்லை.

இந்நிலையில்,உலக கோப்பை தொடரில் விஜய்சங்கருக்கு பதிலாக மயங்க அகர்வால் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக ஷிகர் தவானை தொடர்ந்து விஜய் சங்கர் விலகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More