தமிழ் திரையுலகில் ‘ரன்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின். அனில் ஜான் டைட்டஸ் என்ற பொறியாளரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். துபாயில் வசித்து வரும் அவர் அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. காரணம் அந்த படத்தில் மீரா ஜாஸ்மின் குண்டாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது மலையாள இயக்குனர் அருண் கோபி துபாய்க்கு சென்ற இடத்தில் மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா ஒல்லியாக உள்ளார்.
மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் என்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்கள்.