ஒண்டி வீரன் நினைவு நாளான இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது என்றும் கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார் .