மோசமான வானிலை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் அமர்நாத்தில் பல சோதனைகள் பல இன்னலால் தாண்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த யாத்திரையில் பலத்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு மலைப்பாதையில் சுமார் 14 கிலோமீட்டர் பக்தர்கள் நடந்தே சென்று, நீண்ட பயணத்திற்குப் பின்னர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த மாதம் (ஜூலை) முதல் இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இது முடிவடைய உள்ளது.
ஜூலை பத்தாம் தேதி வரை பத்தே நாட்களில் சுமார் ஒருலட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் இதுவரை யாத்திரையை நிறைவு செய்துள்ளனர்.இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையாகும். மொபைல் ஆப்கள், ஹெலிகாப்டர் சேவைகள், சிசிடிவி கேமரா பாதுகாப்பு போன்றவற்றால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.