பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு சார்பில் 667 பேருக்கு 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், மக்கள் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவு தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்படவில்லை எனக் கூறிய அவர் விலை உயர்த்தப்பட்ட பின்னர் தான் கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளதாகக் கூறினார்.மக்கள் இதை பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, திமுக மக்களை தூண்டிவிட பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.