பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நரேந்திர மோடி மக்கள் முன் உரையாற்றினார் அதில் அவர் கூறியதாவது ,விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்ன மோடி புகழாரம் . மிஷன் சக்தி என்ற விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்திய சோதனையில் வெற்றி கண்டது என அவர் கூறினார் .அமெரிக்க ,ரஷ்ய ,சீன உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா சாதனை படைத்துள்ளது என மோடி பெருமிதம் தெரிவித்தார் .
#MissionShakti was a highly complex one, conducted at extremely high speed with remarkable precision. It shows the remarkable dexterity of India’s outstanding scientists and the success of our space programme.
— Narendra Modi (@narendramodi) March 27, 2019
இந்த விண்வெளி சோதனை முயற்சி இந்தியாவை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது என்றும் ,பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் அவர் கூறினார். மேலும் இந்த சோதனை ஓட்டம் வெறும் 3 நிமிடங்களில் நடந்தது என்று நரேந்திர மோடி கூறினார்.
விண்வெளி ஆயுத குவிப்புக்கு இந்தியா எதிர்ப்பு என்றும் ,விண்வெளியில் இந்தியா 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார் .
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நரேந்திர மோடியின் உரையில் இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியை பற்றி மட்டும் உரையாற்றினார் .
#MissionShakti is special for 2 reasons:
(1) India is only the 4th country to acquire such a specialised & modern capability.
(2) Entire effort is indigenous.
India stands tall as a space power!
It will make India stronger, even more secure and will further peace and harmony.— Narendra Modi (@narendramodi) March 27, 2019