பிரதமர் மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்ஷய் குமார் நடத்தியுள்ளார். இதில், பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அல்லாத கேள்விகள் கொண்ட நேர்காணலை பிரதமர் மோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் நடத்தியுள்ளார்.
இந்த நேர்காணலில், “நான் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை, சன்னியாசியாக வேண்டும் என்று நினைத்துள்ளேன்” என்று மோடி கூறினார்
எம்.எல்.ஏ ஆகும் முன் வரை தனக்கு வங்கிக்கணக்கு இல்லை என்றும் மோடி பேசினார்.
அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோபம் வரும் சூழலை நான் ஏற்படுத்திக்கொள்வது இல்லை” என்று மோடி கூறியுள்ளார்.
”பலர் என்னிடம் அதிக நேரம் தூங்குங்கள் என்று கூறினார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூட கூறினார். ஆனால், எனக்கு 3 – 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் தேவையில்லை” என்றும் மோடி கூறினார்.
Having a wonderful conversation with @akshaykumar. Do watch! https://t.co/3VWRUvWTng
— Narendra Modi (@narendramodi) April 24, 2019