வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அதற்காக, இன்று அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். நேற்று வாரணாசியில் சாலை வழியாக திறந்த வாகனத்தில் மோடி பேரணியில் ஈடுபட்டார்.
அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர்.இந்நிலையில், இன்று காலை வாரணாசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை மோடி தாக்கல் செய்தார்.
#WATCH: PM Narendra Modi files nomination from Varanasi parliamentary constituency. #LokSabhaElections2019 pic.twitter.com/ym9x2gCYYG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 26, 2019