நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் குஜராத்தில் இருக்கும் 26 தொகுதிகளில் ஓரே கட்டமாக இந்த மக்களவை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர் .
நடைபெற்று வரும் இந்த தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் வாக்களிப்பதற்காக அகமதாபாத் வந்திருந்தனர்.அங்கு வந்த பிரதமர் மோடி அங்கு வசித்துவரும் அவரது தாயின் இல்லத்துக்கு முதலில் சென்றார்.அங்கு அவர் தேர்தலில் வெற்றி பெற தனது தாயிடம் ஆசி பெற்றார் .
தாயின் வீட்டில் இருந்து கிளம்பிய மோடி ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தடைந்தார் . பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தனது வாக்கை பதிவு செய்ய முன்பே அங்கு வந்திருந்தார்.
வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த மோடி அங்கு இருந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் .அதில் சொந்த மாநிலத்தில் வாக்களிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார் .பின் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் கட்டாயம் தவறாமல் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி .