நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்கள் அனைவரும் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஒரே நாளில் நாளை மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் உச்ச கட்ட பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றன .
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மதுரையில் மாலை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .பிரதமர் நரேந்திர மோடி தென் தமிழகத்தில் இரவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி இருவரும் மதுரை விமான நிலையத்திற்கு வர இருப்பதால் 7 அடுக்கு பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது .