Mnadu News

மோடி அமித்ஷா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் விதிமுறைகளை பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து மீறி வருவதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்தவிதமான தேர்தல் விதிமீறல் குற்றங்களும் இல்லை என்றே தேர்தல் ஆணையம் முடிவுகளை எடுத்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் எம்.பி ஸ்மிதா தேவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில்  மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். இந்த  வழக்கின் விசாரணையை, உச்ச நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.  இதனிடையே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் களமிறங்கிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More