தற்போது கோடைகாலம் என்பதால் வழக்கத்தை விட தமிழகத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மனிதர்களுக்கே வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாத நிலையில் ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கும் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியவில்லை .அந்த வகையில் இதற்கு உதாரணமாக ,விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தால், கடைகளில் இருக்கும் குடிநீர் பாட்டில்களை குரங்குகள் களவாடிச் செல்வது அதிகரித்துள்ளது.நகர் பகுதியில் பெருகி காணப்படும் குரங்குகள், மனிதர்களிடம் குடிநீர் பாட்டில்கள் இருப்பதை கண்டால், அவற்றையும் பறித்துச் சென்றுவிடுகின்றன. சில நேரங்களில் அவற்றின் தாகத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும், சில வேளைகளில் இடையூறாக அமைவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More