Mnadu News

திருப்பூரில் சர்வதேச யோகா தின விழாவை  முன்னிட்டு  நடைபெற்ற பயிற்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உடல் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி பெறவும் யோகா அவசியம் என்பதன் அடிப்படையில் சர்வதேச யோகா தின விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகா தின விழா நடைபெற்றது . இந்த யோகா தின விழாவில் உலக சமுதாய சேவா சங்கம் துணை தலைவர் கே.ஆர். நாகராஜன் , ஆழியார் அறிவு திருக்கோவில் அறங்காவலர் வி. சுந்தர்ராஜ் ஆகியோர்கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ,
இதில் யோகா தின பயிற்சியில் கை பயிற்சி,மூச்சு பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள் முத்திரைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா தின விழாவில் உலக சமுதாய சேவா சங்கம் துணை தலைவர் பி.கே. ஆறுமுகம், திருப்பூர் மண்டல தலைவர் வி.எம். கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.சாந்தா, பயிற்சியில்  ஆண்கள் ,பெண்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Share this post with your friends