ஆந்திர மாநிலம் மதனபள்ளியை சேர்ந்த 75 வயதான பஷீர் சாப், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் உள்ள தர்காவின் வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பஷீர், இன்று உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பஷீரின் சடலத்தை குந்தக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பஷீர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்திபோது அவர் சேமித்து வைத்திருந்த 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணத்தை கண்டறிந்தனர் . உயிரிழந்த பஷீரின் உறவினர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்காததால் பணத்தை கைப்பற்றிய போலீசார், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.