Mnadu News

குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் 4 பெண்கள் கைது

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் செவிலியர் பர்வீன் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகளை பேரம் பேசி விற்றுவந்த விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமுதாவிடம் நடத்திய விசாரணையில் குழந்தை விற்பனைத் தொழிலில், ஈரோட்டில் பணிபுரியும் தனியார் மருத்துவமனை செவிலியரான பர்வீனுக்கு கொல்லிமலையில் பணிபுரியும் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனரான முருகேசனுக்கும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். செவிலியர் பர்வீனிடம் மேற்கொண்ட விசாரணையில், நாமக்கல்லில் ஒன்றும், திருச்சியில் ஒன்றும், மதுரையில் இரண்டுமாக மொத்தம் 4 குழந்தைகளை விற்றதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் மேற்கொண்ட விசாரணையில், கொல்லிமலையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புக்கொண்டதாகவும், சொல்லப்படுகிறது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More