விவசாயத்துக்காக கடன் வாங்கி திருப்பி கட்ட இயலாமல் உயிரை விடும் விவசாயிகளுக்கு மத்தியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சட்டத்தின் கீழ் தமது சொத்துக்களை முடக்குவது சட்டவிரோதம் எனவும், அரசுத் துறைகளின் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறும் கூறி விஜய் மல்லையா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.