இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அர்ஜூன், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைத்து நடித்துள்ள படம் ‘கொலைகாரன்’. ஒருதலை பட்சமாக காதலிக்கும் தனது காதலிக்காக பல கொலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதியை படக்குழுவினர் வித்தியாசமாக அறிவித்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் வெளியிட்டுள்ள காணொளியில், மே 17 முதல் சில தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதியாக ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.