Mnadu News

நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம்

நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இவர்களது பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக நடிகர் சங்கத்தேர்தல் 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த மாத அவகாசம் முடிவு பெற்றுள்ளதால், ஜூன் மாதத்தில் நடிகர் சங்கத்தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க இன்று நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

Share this post with your friends