பிரபல இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்த படத்தில் திருநங்கையாக பிரபல நடிகை ஸ்ரீ பல்லவி தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற இயக்குனரின் குரல் மற்றும் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல வந்த கதையை இயக்குனர் அழகாக காட்டிருப்பார்.ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது .
இந்நிலையில் திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு 2018ம் ஆண்டிற்க்கான சிறந்த நடிகை பிரிவில் தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலர் தாதா 87 படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்