பிரெஞ்சுப் புரட்சியின் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் 1789ஆம் ஆண்டு பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட தினம் பிரான்சில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பாரிசின் சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் ஏற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை கண்டு களித்தனர். இதில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் பிளை போர்டு எனப்படும் செயற்கை இறக்கை பொருத்தி வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More