Mnadu News

19-ஆம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 19-ஆம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் உத்திர பிரதேசம், குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதற்காக தடகள வீரர் கோமதி மாரியப்பனுக்கு அக்கல்லூரியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More