Mnadu News

‘நட்பே துணை’ படத்தின் முக்கிய தகவல்

இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து இருக்கும் படம் ‘நட்பே துணை’. இந்த படத்தில் நடிகை அனேகா, கரு பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது.சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends