Mnadu News

‘நீயா 2’ திரையிடும் தேதி திடீர் மாற்றம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா, ராய்லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘நீயா 2’. எல்.சுரேஷ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படம் மே 10ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தை திரையிடுவதை இரண்டு வாரத்திற்கு தள்ளிப்போடும்படி விநியோகிஸ்தர்கள் கோரிக்கை விடுத்ததால், ‘நீயா 2’ திரையிடும் தேதி மே 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share this post with your friends