இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் காதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும், ஒருசில நாட்கள் இடைவெளியில் திருமணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ரஜினியின் ‘தர்பார்’, சிரஞ்சீவியின் ‘சைர நரசிம்மரெட்டி’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளை நவம்பருக்குள் நயன்தாரா முடித்துவிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.