Mnadu News

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’ படம் குறித்த புதிய தகவல்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ‘தளபதி 63′ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள படம் ’99 சாங்ஸ்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகின்ற ஜூன் 21ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஏஹான் பட்டிற்கு வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் உங்களிடம் பெற்ற அன்பை போலவே ரசிகர்களிடம் இருந்து நீங்கள் பெரிய அளவில் அன்பை பெறுவீர்கள்” என்று அதில் கூறியுள்ளார்.

Share this post with your friends