இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ படம் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் “டபக்குன்னு” என்ற முதலாவது பாடலும் வெளியாகியது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்கள் மே 8ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது