இயக்குனர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடித்து வரும் படம் ‘யோகி டா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லூசிபர்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.