உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின் இன்றைய பயிற்சி போட்டியில், நியுசிலாந்தை இந்தியா மோதுகிறது . உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் 48 போட்டிகள் நடக்க உள்ளன.அடுத்த மாதம் 5ஆம் தேதி தனது முதலாவது போட்டியில் விளையாடும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது.பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கப் போவது யார்?என்பதை இந்தப் போட்டி தீர்மானிக்கும். மேலும் 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் பயன்படுத்தலாம் என்பதால், சிறந்த 11 வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More