சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரித்சிங் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படம் .
பல எதிர்பார்களுக்கு சொந்தமான இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
இந்த படத்தின் வெளியீட்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த ரசிகர்கள், 220 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட் ஒன்றை வைக்க முடிவு செய்தனர்.
இந்த கட் அவுட் ரூ.6.5 லட்சம் செலவில் இரும்புக்கம்பிகள் ஆதரவுடன் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கட்-அவுட் நகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்-அவுட் பெரிய காற்றடித்தால் கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி நகராட்சி ஊழியர்கள் இந்த கட்-அவுட்டை நீக்கி அப்புறப்படுத்தியுள்ளனர் .