சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனார் .அப்பொழுது திடீரென பிரேக் போட்டதால் பேருந்தின் மேற்கூரையில் உள்ள மாணவர்கள் கொத்தாக கீழேவிழுந்தனர் .
இந்நிலையில் ,பஸ் டே கொண்டாட்டத்தின்போது தடம் எண் 25-ஜி மாநகர பேருந்தில் பயணிகள், நடத்துனருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் மீது புகார் எழுந்துள்ளது .
பேருந்தில் ரகளை செய்த புகாரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.