Mnadu News

எந்த ஒரு கருத்தையும் யாரை பற்றி கூறவில்லை – குல்தீப் யாதவ்

களத்தில் தோனியின் முடிவுகள் சில நேரங்களில் தவறாக முடியும் என்று தான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று இளம் வீரர் குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில், தோனி களத்தில் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் தவறாக முடியும் என்று பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதன் பிறகு பலரும் குல்தீப் யாதவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் தான் யாரை பற்றியும் எந்த கருத்தும் கூறவில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில், தோனியின் முடிவுகள் குறித்து தான் கூறியதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் தோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends