Mnadu News

அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை – ஜெ.தீபா

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அவர்கள் அறிவிப்பை தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.

தீபாவின் அமைப்புக்கு பெரியதாக வரவேற்பு இல்லததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் தான் இயக்கத்தை கலைப்பதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் தீபா தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டிருந்தார் .

Image result for ஜெ.தீபா

இதனையடுத்து , தீபா பேரவையிலிருந்த தலைமை நிலைய நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பியுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி கூறுகையில், எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை என்று குறிப்பிட்டார்.அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம்.

Image result for ஜெ.தீபா

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தீபா அவர்கள் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என கூறியிருந்தார் அதனடிப்படையில் இன்று இந்த கடித்தை வழங்கயுள்ளோம் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களையும் இது குறித்து சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ தீபா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தெரிவிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, எம்.ஜி.ஆர் அம்மா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று தீபா அறிவித்தார்.

உடல்நலக்குறைவால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியவில்லை என்றும், தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற அதிமுகவுடன் இணைவதாக தீபா கூறினார்.மேலும் அதிமுகவில் பதவி, பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை என்றும் தீபா குறிப்பிட்டார்.போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும் எனவும் ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Share this post with your friends