ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அமுதா என்பவர் குழந்தை விற்பனை செய்வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது . தற்போது வரை சுமார் 12 குழந்தைகள் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து ராசிபுரம் நகராட்சியில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 4 ஆயிரத்து 500 குழந்தை பிறப்பு சான்றிதழ் மற்றும் கொல்லிமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கியுள்ள சுமார் 1000 பிறப்பு சான்றிதழ் ஆய்வு செய்ய தலைமை சுகாதார துறை மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவிடப்பட்டது .
நாமக்கல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் குறித்த ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குழுவிற்கும் மருத்துவர் தலைமையில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது . விசாரணையின் முடிவில் அமுதா ஓட்டுநர் முருகேசன் உட்பட இன்னும் சிலர் சிக்குவார்கள் என்று நம்பப்படுகிறது